வணிக வரி அலுவலர் கூட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு உதவி கமிஷனர், வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர் சங்கம் சார்பில் பிரசார வாயிற் கூட்டம் நடந்தது. வணிகவரித்துறை அலுவலகம் முன்பு நடந்த இக்கூட்டத்திற்கு கோட்டத் தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். செயலாளர் குணாளன், நிர்வாகிகள் ஏ.சாந்தி, முருகேசன், முத்தழகு, கல்யாணசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர். உச்சநீதி மன்ற வழக்கை விரைந்து முடித்து காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பாதுகாப்பான சூழலில் அலுவலர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் முறையான வேலை பகிர்வு அளிக்க வேண்டும். நேரடி நியமனத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். கோட்டங்களில் சட்டக்குழுவை அமைக்க வேண்டும். தேவையற்ற புள்ளிவிவரம் கோருவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அக்.10ம் தேதி வரை இந்த வாயிற்கூட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் கூறினர்.