மேலும் செய்திகள்
சிறுமுகையில் ரூ.1.60 கோடியில் சமுதாயக்கூடம்
12-Jun-2025
சோழவந்தான்: சோழவந்தான் தென்கரையில் சமுதாயக்கூடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.இங்குள்ள சமுதாயக்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. கட்டடம் சேதம் அடைந்து கான்கிரீட் கூரைகள் ஆங்காங்கே பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. கட்டடத்தின் பல பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.அப்பகுதி தர்மர் கூறியதாவது: சமுதாயக் கூடத்தில் இரவில் சமூக விரோதிகள் மது அருந்துகின்றனர். அவர்கள் வீசி எறியும் பிளாஸ்டிக், குப்பை கழிவுகள் நிறைந்து வளாகமே பாழடைந்துள்ளது. அவ்வப்போது முதியோர் சிலர் இங்கு அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். பழை கட்டடம் என்பதால் காரை பெயர்ந்து விபரீதம் விளைய வாய்ப்புள்ளது.புதிய சமுதாயக்கூடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேதமான கட்டடத்தை இடித்து உடனே அப்புறப்படுத்துவதன் மூலம் விபரீதத்தை தவிர்க்கலாம்.ஊராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, 'புதிய சமுதாயக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'என்றார்.
12-Jun-2025