உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீதிபதி மகன் மீது தாக்குதல் டிவி தொகுப்பாளர் மீது புகார்

நீதிபதி மகன் மீது தாக்குதல் டிவி தொகுப்பாளர் மீது புகார்

முகப்பேர்: முகப்பேர் கிழக்கு அருகே, உயர் நீதிமன்ற நீதிபதி கயல்விழி என்பவரின் மகன் ஆதிசுடி, நேற்று இரவு, தன் தோழியுடன் டீ குடிப்பதற்காக, காரில் சென்றார்.அப்போது, அவரது காரை அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி சென்றுள்ளார். வீட்டில்இருந்து வந்த தனியார் 'டிவி' தொகுப்பாளர் தர்ஷன், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த காரை எடுக்குமாறு, ஆதிசுடியிடம் கூறியுள்ளார்.அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. இதில் லேசான காயமடைந்த ஆதிசுடி மற்றும் அவரது நண்பர் மகேஷ்வரி, இருவரும் அண்ணா நகர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இது குறித்து, ஆதிசுடி தரப்பிலும், தனியார் 'டிவி' தொகுப்பாளர் தர்ஷன் தரப்பிலும், ஜெ.ஜெ., நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ