மேலும் செய்திகள்
பெண் போலீசாருக்கு கராத்தே பயிற்சி முகாம்
07-Oct-2026
சமயநல்லூர்: பரவையில் இ.டி.ஐ.ஐ., சார்பில் இலவச சிறுதானிய பேக்கரி மற்றும் பேஸ்டரி தயாரிப்பு பயிற்சி நிறைவு விழா நடந்தது. இங்கு எஸ்.இ.டி.பி.15 பயிற்சித் திட்டத்தில் பெண்களின் தொழில் முனைவோர் திறனை மேம்படுத்த ஒரு மாத பயிற்சி நடந்தது. சிறுதானியங்களை பயன்படுத்தி பேக்கரி உணவுப் பொருள் தயாரிப்பு, சுயதொழில், வருமானம் ஈட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நிறைவு விழாவில் விருந்தினர்களாக முன்னாள் சேர்மன் ராஜா, அனிதா பங்கேற்றனர். ஒளிச்சுடர் மன்ற நிர்வாகிகள் அந்தோணி ரோசலின், சுனிதா முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் குளோரி நன்றி கூறினார். அலுவலர் நம்பிராஜன் ஏற்பாடு செய்தார்.
07-Oct-2026