மேலும் செய்திகள்
மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது
13-Oct-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார் தலைமையில் நடந்தது. டி.எஸ்.பி., சந்திரசேகரன், பேரையூர் ஏ.எஸ்.பி., அஸ்வினி, தாசில்தார்கள் உசிலம்பட்டி பாலகிருஷ்ணன், பேரையூர் செல்லப்பாண்டி, நகராட்சி கமிஷனர் இளவரசன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். வாகனங்களில் செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும், அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. டி.எஸ்.பி., சுரேந்திரகுமார் நன்றி கூறினார்.
13-Oct-2025