உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நில அளவை அலுவலர் தற்செயல் விடுப்பு

நில அளவை அலுவலர் தற்செயல் விடுப்பு

மதுரை: மதுரையில் நிலஅளவை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றதால் பணிகள் பாதித்தன.தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நடந்த இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் மாநில செயலாளர் திவ்யா வரவேற்றார். முத்துமுனியாண்டி முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரகுபதி, துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, மாநில செயலாளர் சந்திரபோஸ், வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர் சங்க மாநில செயலாளர் ஜெயகணேஷ் உட்பட பலர் பேசினர்.நிலஅளவையருக்கு நிர்வாக பயிற்சி, நீதிமன்ற பயிற்சி வழங்க வேண்டும். களப்பணியாளர் பணிகளை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடு வழங்கவும் வேண்டும். உதவி இயக்குனர், கூடுதல் இயக்குனர் பணிகளை மண்டல துணை இயக்குனர், இணைஇயக்குனர், இயக்குனருக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நிலஅளவைத் துறையில் பொது மாறுதல் நடைமுறையை மாற்றி அமைக்க எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இப்போராட்டத்தால் நிலஅளவைத் துறை அலுவலகங்கள் காலியாக கிடந்தன. பணிகளும் பாதித்தன. மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி