மேலும் செய்திகள்
மெதுார் கூட்டுறவு வங்கிக்கு விருது
08-Dec-2025
துாத்துக்குடி: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் பைக்கில் சென்றபோது, மாடு குறுக்கிட்டதால் தவறி விழுந்து உயிர் இழந்தார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே போலையார்புரத்தை சேர்ந்தவர் பெனிஸ்கர், 58. சாத்தான்குளம் அருகே அரசூர் தொடக்க வேளாண்மை கூட் டுறவு வங்கியில் செய லராக பணியாற்றிவந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் பெனிஸ்கர் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அரசூர் அருகே மோடிநகர் பகுதியில் அவர் சென்றபோது திடீரென சாலையில் மாடு குறுக்கிட்டதால், பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்த பெனிஸ்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெனிஸ்கர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு கனிஷ்டி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். விபத்து குறித்து தட்டார்மடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Dec-2025