உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சி.ஓ.பி.டி. தின விழிப்புணர்வு

சி.ஓ.பி.டி. தின விழிப்புணர்வு

மதுரை; மதுரை அரசு மருத்துவமனை நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி.,) தின விழிப்புணர்வு விழா நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ் குமார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்வழங்கினார். துறைத்தலைவர் பிரபாகரன் கூறியதாவது: இந்த நோய் நுரையீரலை மட்டுமின்றி, எலும்புகளின் கடினத்தன்மை, தசைகளின் உறுதித்தன்மையையும் குறைத்து மனச்சோர்வு, மாரடைப்பை ஏற்படுத்துகிறது. மிகக்குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை, குழந்தை பருவத்தில் அடிக்கடி ஏற்பட்ட நுரையீரல் வைரஸ் தொற்று ஆகியவை இந்நோய்க்கு முதல் காரணமாக உள்ளது.புகையிலை தவிர்த்து சத்தான சரிவிகித உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சிசெய்வது, வீடு மற்றும் வேலை பார்க்கும் இடங்கள் நல்ல காற்றோட்டமாக இருப்பது ஆகியவைசி.ஓ.பி.டி., நோய் வருவதை தவிர்க்கும். ஆண்டுக்கு ஒரு முறை 'இன்ப்ளுயன்சா' தடுப்பூசி, 'நியூமோகோகல்' தடுப்பூசி செலுத்துவது நல்லது என்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ. சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.* தோப்பூர் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நடந்த விழாவில் ஆர்.எம்.ஓ., ஸ்ரீலதா தலைமை வகித்தார். இணை பேராசிரியர் இளம்பரிதி, உதவி பேராசிரியர் ஜெய்கணேஷ் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை