உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூட்டங்களுக்கு வழிகாட்டுதல் கோர்ட்டில் வழக்கு

கூட்டங்களுக்கு வழிகாட்டுதல் கோர்ட்டில் வழக்கு

மதுரை : கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.,27 த.வெ.க., பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கலான பல்வேறு மனுக்களில் கூறியுள்ளதாவது: சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இழப்பீடு தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பொதுக்கூட்டம், போராட்டம் தொடர்பாக கட்சிகள், அமைப்புகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வழிகாட்டுதல்களை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தசரா விடுமுறைக்கால சிறப்பு அமர்வில் அக்.,3ல் விசாரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி