உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காரைக்குடி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரகசிய ஓட்டெடுப்பிற்கு கோர்ட் உத்தரவு

காரைக்குடி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரகசிய ஓட்டெடுப்பிற்கு கோர்ட் உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துதுரைக்கு (தி.மு.க.,) எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலிக்க கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தி ரகசிய ஓட்டெடுப்பு நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.காரைக்குடி மாநகராட்சி அ.தி.மு.க.,கவுன்சிலர் ராம்குமார் தாக்கல் செய்த மனு:காரைக்குடி மாநகராட்சியில் 36 வார்டுகளுக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு கவுன்சிலர் ராஜினாமா செய்தார். தற்போது 35 கவுன்சிலர்கள் உள்ளனர். நிர்வாக திறமையின்மை, மக்கள் அதிருப்தி மற்றும் சட்டப்படி கடமைகளைச் செய்யத் தவறியதால் தற்போதைய மேயர் மீது 23 கவுன்சிலர்கள் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.நான் மற்றும் 22 கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்காக ஜூலை10 ல் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தோம். மாநகராட்சி கூட்டம் நடத்த சட்டப்படி போதிய கவுன்சிலர்கள் (கோரம்) இருந்தபோதிலும், சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட கமிஷனர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளை மீறுவதாகும்.கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்ததிலிருந்து 30 நாட்களுக்குள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலிக்க விதிகள்படி கூட்டம் நடத்த வேண்டும்.மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பரிசீலிக்க மாநகராட்சி சிறப்புக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜரானார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மனு அளித்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மாநகராட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். விதிகள்படி ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை