உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாசி படர்ந்த குழாய்கள் துாண்களில் வெடிப்பு

பாசி படர்ந்த குழாய்கள் துாண்களில் வெடிப்பு

மேலுார்: பரமநாதபுரத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது தொட்டி, பில்லர்களில் வெடிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.மக்கள் கூறியதாவது: சிதிலமடைந்த தொட்டியில் இன்று வரை தண்ணீர் ஏற்றி சப்ளை செய்வதால் அச்சத்துடனே வசிக்கிறோம். குழாய்கள் பராமரிப்பின்றி பாசி படர்ந்துள்ளது. அதனால் சுகாதாரமற்ற தண்ணீர் சப்ளை செய்வதால் தொட்டியை பொறியாளர்கள்ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் அல்லது புதிதாக கட்ட வேண்டும் என்றார்.கொட்டாம்பட்டி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ''தொட்டியின் தரம் குறித்து ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ