பயிர் மேலாண்மை முகாம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டார வேளாண்மைத்துறை அட்மா திட்டம் சார்பில் புதுக்குளம் பிட் 1 கிராமத்தில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகள், விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள் இணைப்பை வலுப்படுத்தும் முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம், வேளாண் அறிவியல் மையம் பூச்சியியல் துறை பேராசிரியர் சுரேஷ், உதவி பொறியாளர் காசிநாதன், வேளாண் அலுவலர் அருள் நவமணி, விஜயபாரதி பேசினர். ஏற்பாடுகளை வட்டார மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி செய்திருந்தனர்.