சமையலறை சேதம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டி ஊராட்சி துவக்கப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட 'தகர செட்' சமையலறை சேதமடைந்துள்ளது. இப்பள்ளி சமையலறை கட்டடத்தை ஒட்டி காலை உணவு திட்டத்திற்காக இந்த அறை அமைக்கப்பட்டது. தரமற்ற தகரம் பயன்படுத்தப்பட்டதால் கூரைகள் சல்லடையாகவும், கிழிந்த கந்தல் துணி போலவும் மாறி உள்ளது. இதனால் உணவு தயாரிக்க தேவையான பொருட்களை இருப்பு வைக்க முடியவில்லை. மழை நேரங்களில் சமைக்க முடியாத சூழல் உள்ளது. 'தகர செட்' அமைத்த சில மாதங்களிலேயே சேதமடைந்தத சமையலறை கூரையை சீரமைத்து தரப்படவில்லை. இதனால் மேலும் சேதமடைந்து, மழை நீர் ஒழுகுகிறது. இதனால் உணவு சமைக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சமையலறையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.