உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த ரோடு

கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியம் திருமால் கிராமம் - சமத்துவபுரம் ரோட்டில் அரசபட்டி, துாம்பகுளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ரோட்டில் மேடுபள்ளங்களாகவும் சரளை கற்களாகவும் சிதறிக் கிடக்கின்றன. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அதிவேகமாக செல்லும் குவாரி லாரிகளால் ரோடு சேதமாவதோடு விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இரவில் வாகனங்கள் மேடு பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ரோட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ