உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இறந்த பெண் எஸ்.ஐ., ஏட்டு உடல் தகனம்

இறந்த பெண் எஸ்.ஐ., ஏட்டு உடல் தகனம்

மதுரை:சென்னை மாதவரம் பால் பண்ணை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜெயஸ்ரீ 38. திருவொற்றியூரில் வசித்து வந்தார்.இதே ஸ்டேஷனில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே கொசுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நித்யா 35, ஏட்டாக பணிபுரிந்தார்.விடுப்பில் இருந்த இருவரும் நேற்றுமுன்தினம் காலை டூவீலரில் மேல்மருவத்துார் கோயிலுக்கு சென்றபோது மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி இறந்தனர்.ஜெயஸ்ரீ உடல், சொந்த ஊரான மதுரை கூடல்புதுாருக்கு கொண்டு வரப்பட்டது. துணைகமிஷனர் மதுகுமாரி, பெற்றோர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின் தத்தனேரி மின் மயானத்தில் போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.நித்யா உடல் கொசவபட்டி கொண்டு வரப்பட்டது. ஆயுதப்படை எஸ்.ஐ., செல்வம் தலைமையிலான போலீசார் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை