உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு மையம்

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு மையம்

திருநகர்: விளாச்சேரி வடக்கு முஸ்லிம் தெருவில் பொதுமக்களின் வசதிக்காக திருப்பரங்குன்றம் ஒன்றிய நிதியிலிருந்து பல லட்சம் ரூபாய் செலவில் ஒன்றரை ஆண்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டது.அன்று முதல் இந்த இயந்திரம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பூட்டியே கிடக்கிறது. ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் மக்கள்கோரிக்கை வைக்கின்றனர். ஆனாலும் அந்த சுத்திகரிப்பு மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு மனது வரவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் மக்கள் பணம்தான் வீணாகிறது.இந்நிலை மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் அந்த இயந்திரத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே, சுத்திகரிப்பு மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை