ஆர்ப்பாட்டம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை 'சர்ச்'சில் பணி செய்து வந்த சாணம்பட்டி மதன் ஜெயராஜ் 40, உள்ளிட்டோர் பக்தர்களிடம் போலி ரசீது கொடுத்து ஊழல் செய்ததாகவும், அதற்கு உறுதுணையாக முன்னாள் பாதிரியார்கள், பணியாளர்கள் செயல் பட்டதாகவும் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி லுார்து ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.