சிக்னல் பிரச்னையால் பேசுவதில் சிக்கல்
பேரையூர் : பேரையூர் பகுதியில் சில நாட்களாக சிக்னல் பிரச்னையால் அலைபேசியில் பேசும்போது 'கட்' ஆவதால் மக்கள் அவதி அடைகின்றனர். இப்பகுதியில் சில நாட்களாக அலைபேசி வாயிலாக யாரிடமும் முழுமையாக பேச முடியவில்லை. பேசிக்கொண்டிருக்கும்போதே சிக்னல் சரிவர கிடைக்காமல் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ, வோடபோன் என அனைத்து நிறுவனங்களின் இணைப்புகளிலும் இப்பிரச்சனை உள்ளது. டயல் செய்தவுடன் அடுத்த முனையில் உள்ள அலைபேசிக்கு ரிங் போவது கேட்பது இல்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே 'கட்' ஆகிறது. இதனால் அவசர தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதியில் உள்ளனர். அனைத்து அலைபேசி நிறுவனங்களும் சிக்னல் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.