உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாழாகும் குடிநீர் தொட்டி

பாழாகும் குடிநீர் தொட்டி

சோழவந்தான் : சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் கோவில்பட்டியில் பழைய மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இங்குள்ள மருதப்பசுவாமி கோயில் அருகே உள்ள குடிநீர் தொட்டி பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. போதுமான பராமரிப்பின்றி ஏற்கனவே சேதம் அடைந்த நிலையில் ஆங்காங்கே சிமென்ட் பூச்சினால் ஒட்டு போடப்பட்டு துாண்களுக்கு கான்கிரீட் கலவை மூலம் வலு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தொட்டியில் இருந்து கீழ் இறங்கும் குழாயில் கசியும் நீர் துாண்களில் பட்டு விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் துாண்களில் செடிகள் முளைத்து வலுவிழக்கும் நிலை உள்ளது. விபரீதம் விளையும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ