உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உயர்கல்வி சந்தேகங்களை தீர்த்து வைத்தது தினமலர் வழிகாட்டி மாணவர்கள் பெற்றோர் மகிழ்ச்சி

உயர்கல்வி சந்தேகங்களை தீர்த்து வைத்தது தினமலர் வழிகாட்டி மாணவர்கள் பெற்றோர் மகிழ்ச்சி

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் உயர்கல்வியை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்ற பல்வேறு சந்தேகங்கள் தீர்ந்தன' என மாணவர்கள், பெற்றோர் உற்சாகம் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:ஆலோசனைகளை அள்ளித் தந்ததுபி.இ., வேளாண் படிப்பு படிக்க முடிவு செய்துள்ளேன். இதுபோல் ஜெ.இ.இ., உள்ளிட்ட நுழைவுத் தேர்வு குறித்தும் பல சந்தேகங்கள் இருந்தன. எந்த படிப்பை எடுக்கலாம் என ஏராளமான ஆலோசனைகள் இந்நிகழ்ச்சியில் கிடைத்தன. அதையும் தாண்டி பிற ஏராளமான படிப்புகள் படிக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிந்துகொண்டேன்.அனு ஸ்நேகா, மாணவி, பழநிபயன் தரும் கல்வி அரங்குகள்என் மகன் பயாலஜி குரூப் படித்துள்ளார். உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்து ஒரு ஐடியாவும் இல்லாமல் இந்நிகழ்ச்சிக்கு வந்தோம். மருத்துவம், பொறியியல் தவிர மதிப்பெண்களுக்கு ஏற்ப எந்த படிப்புகளை தேர்வு செய்யலாம் என்ற தெளிவும் கிடைத்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் பல கல்லுாரிகளில் என்ன படிப்புகள் உள்ளன, எவ்வளவு கட்டணம் என்ற விவரத்தையும் அறிய முடிந்தது.லதா ஸ்ரீ, பெற்றோர், மதுரைகல்லுாரிகளை தேர்வு செய்வதில் தெளிவுமுதல் முறையாக தினமலர் வழிகாட்டிக்கு வந்தேன். பிளஸ் 2வுக்கு பின் என் மகள் பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு எவ்வாறு தயாராவது, எந்த கல்லுாரிகளை தேர்வு செய்வது போன்ற ஏராளமான தகவல்கள் கிடைத்தன. கட்ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்ற படிப்புகள் குறித்தும், கடல்சார் கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகள் உள்ளதும் தெரியவந்தது. தினமலர் நாளிதழுக்கு நன்றி.சத்யா, பெற்றோர், மதுரைதெளிவு கிடைத்ததுபிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி நான். அதுதொடர்பாக எந்த பிரிவு படிக்கலாம் என அறிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஏராளமான ஐடியாக்கள் கிடைத்தன. டேட்டா சயின்ஸ், ஏ.ஐ., ரோபோட்டிக்ஸ், கிளவுடு கம்ப்யூட்டிங் போன்ற பிரிவுகள் குறித்து தெரிந்துகொண்டேன். தெளிவாக உயர்கல்வியை தேர்வு செய்வேன் என நம்புகிறேன்.விஹா ஸ்ரீ, மாணவி, மதுரை

பள்ளிகளின் அரங்குகள்

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் முதல்முறையாக ஏராளமான முன்னணி பள்ளிகள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. இவை பெற்றோரை கவர்ந்தன. ஆர்வத்துடன் மாணவர்கள் பார்வையிட்டனர். சரியான பள்ளிகளையும் தேர்வு செய்ய வாய்ப்பு அமைந்தது என பெற்றோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை