உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏப்.,27 மதுரையில் தினமலர் ‛நீட் மாதிரி தேர்வு மாணவர்களே... இன்றே முன்பதிவு செய்யுங்கள்

ஏப்.,27 மதுரையில் தினமலர் ‛நீட் மாதிரி தேர்வு மாணவர்களே... இன்றே முன்பதிவு செய்யுங்கள்

மதுரை:பிளஸ் 2 முடித்து மருத்துவ கனவில் உள்ள மாணவர்களுக்காக மதுரையில் தினமலர் நாளிதழ் - ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 'நீட் மாதிரி நுழைவுத் தேர்வு' பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ஏப்.,27 காலை 10:00 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கனவில் உள்ள மாணவர்கள் நலன் கருதி தினமலர் சார்பில் இந்த மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டும் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளைய டாக்டர் கனவு, நனவாகும் வகையில் மாணவர்களுக்கு இத்தேர்வு மூலம் தினமலர் வழிகாட்டுகிறது.நீட் மெயின் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள், தங்களை தாங்களே சுயமாக பரிசோதித்துக்கொள்ள இத்தேர்வு நல்ல வாய்ப்பாக இருக்கும்.இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 96777 60856 என்ற அலைபேசி எண்ணில் அழைத்து, தங்கள் பெயர், ஊர், அலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாணவர்கள் முன்பதிவு செய்யலாம்.தேர்வு நடக்கும் நாளில் காலை 9:45 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். தேர்வு தமிழ், ஆங்கிலத்தில் நடத்தப்படும். அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை