உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒச்சுபாலு மீதான குண்டர் சட்டம் உறுதியானது

ஒச்சுபாலு மீதான குண்டர் சட்டம் உறுதியானது

மதுரை : மதுரையில் தி.மு.க., மூன்றாம் பகுதி செயலாளர் ஒச்சுபாலு மீதான குண்டர் சட்டத்தை ஆலோசனை குழுமம் உறுதி செய்தது. மதுரை கரிமேட்டை சேர்ந்தவர் மோகன்தாஸ்காந்தி,34. தனியார் வங்கியின் வசூல் பிரிவு ஊழியரான இவரிடம், மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த நாளை கொண்டாட ரூ.50 ஆயிரம் கேட்டு ஒச்சுபாலுவும், கூட்டாளிகளும் 2010 ஜன.,22ல் தாக்கினர். இவ்வழக்கில், கடந்த ஆக.,6ல் ஒச்சுபாலு கைது செய்யப்பட்டார். மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்தவர் நகைப்பட்டறை உரிமையாளர் குமார்,45. இவர் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து, வீடு மற்றும் நிலத்தை தன் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டிய வழக்கில் ஒச்சுப்பாலுவை ஆக.,10ல் போலீசார் கைது செய்தனர். தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஆக.,17ல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து நேற்று முன் தினம் சென்னையில் மூன்று நீதிபதிகளை கொண்ட ஆலோசனை குழுமம் விசாரணை நடத்தியது. இதில், ஒச்சுபாலு மீதான குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பொட்டுசுரேஷ், வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி ஆகியோருக்கு குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

panneer selvam
செப் 09, 2025 17:02

What edapaddy said is wrong , In registration office they ge extra amount ,not to be considered as corruption but as service ges for providing service to public .


panneer selvam
செப் 09, 2025 17:02

What edapaddy said is wrong , In registration office they ge extra amount ,not to be considered as corruption but as service ges for providing service to public .


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ