தினமலர் செய்தி: கிடைத்தது குடிநீர்
கொட்டாம்பட்டி: பரமநாதபுரம், மாங்குளபட்டி கிராமங்களில் 15 நாட்களுக்கு முன் மோட்டார் பழுது ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தினர் மோட்டாரை கழற்றிச் சென்றனர். ஆனால் சரி செய்து திரும்ப கொண்டு வரவில்லை. அதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடிநீர் இன்றி சிரமப்பட்டனர். தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து பி.டி.ஓ., சங்கர் கைலாசம் நடவடிக்கை மேற்கொண்டார். மோட்டார் பழுது நீக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டதால் 2 கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்