தினமலர் செய்தி: மார்க்கெட் கிளீன்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சந்தை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதில் உள்ள 7.85 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்தது. நிர்வாகத்தை ஒப்படைக்காமலும், சந்தை திடலுக்குள் தேங்கும் குப்பையை அகற்றாததாலும் சந்தைக்குள் எங்கு பார்த்தாலும் குப்பை மேடு உருவானது. இது குறித்து நவம்பரில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து மதுரை கலெக்டர் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் தேன்மொழி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், வார்டு கவுன்சிலர்கள் இணைந்து நேற்று சந்தை திடலுக்குள் பார்வையிட்டனர். ரோடு, மற்றும் சுற்றுப்பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பை மேடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.