உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொடக்க கல்வி இயக்குநர் ஆய்வு

தொடக்க கல்வி இயக்குநர் ஆய்வு

மதுரை: மதுரையில் அரசு பள்ளிகள் செயல்பாடுகள், காலை உணவுத் திட்டம் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆய்வு செய்தார். யா.ஒத்தக்கடை தொடக்க பள்ளியில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஆசிரியர்களை பாடம் நடத்த செய்து கற்றல் கற்பித்தல் திறனை ஆய்வு செய்தார். இயக்குநரை தலைமையாசிரியை (பொறுப்பு) மாலா தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர். ஆசிரியர் மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல் திருமோகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'திறன்' திட்டம் குறித்தும் இயக்குநர் ஆய்வு செய்தார். மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் சிவக்குமார், வாடிப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !