கலந்துரையாடல்
மதுரை: மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்தது. மதுரை விற்பனைக்குழு செயலாளர் அழகு ராஜா முன்னிலை வகித்தார். மெர்சி ஜெயராணி பேசுகையில், ''வாடிப்பட்டி விற்பனை கூடத்தில் தான் தமிழகத்திலேயே மட்டை தேங்காய் வரத்து அதிகம் பெறப்பட்டு விற்கப்படுகிறது. உள்ளூர், வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் பங்கேற்பதால் ஏலப் போட்டியின் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது'' என்றார்.