உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காட்சிப் பொருளாக நிற்கும் ஆர்.ஒ. பிளான்ட்

காட்சிப் பொருளாக நிற்கும் ஆர்.ஒ. பிளான்ட்

திருநகர்: திருநகர் ஜோசப் நகர் விளாச்சேரி ரோட்டில் 2022-23ல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வாக இருந்த ராஜன் செல்லப்பா, தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 15 லட்சம் செலவில் போர்வெல், சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைத்து பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஜோசப் நகர், மகாலட்சுமி காலனி, திருநகர் ஆகியவற்றில் வசிக்கும் ஒரு பகுதியினர் அங்கு குடிநீர் பிடித்துச் சென்றனர். ஒருவருக்கு தினமும் 2 குடம் குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. அச் சுத்திகரிப்பு நிலைய இயந்திரம் பழுதானதால் நிறுத்தி வைக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. இதனால் பொதுமக்கள் தனியார் லாரிகளில் ஒரு குடம் குடிநீரை ரூ. 10 முதல் ரூ. 15 க்கு வாங்கி குடிநீராக பயன்படுத்துகின்றனர். குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரங்களை சீரமைத்து மீண்டும் குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ