உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்ட தடகளப் போட்டி

மாவட்ட தடகளப் போட்டி

மதுரை: பள்ளிக்கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஒலிம்பிக் தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் கல்லாணை, கார்த்திகேயன், துணைமேயர் நாகராஜன், முதன்மை கல்வி அலுவலர் தயாளன், விளையாட்டு அலுவலர் முருகன் பங்கேற்றனர். உடற்கல்வி ஆய்வாளர் வினோத் ஏற்பாடு செய்திருந்தார். மாணவ, மாணவியருக்கான 14 வயது, 17 மற்றும் 19 வயது பிரிவு தடகளப் போட்டிகள் இன்றுடன் (அக்.16) நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ