முதியோர் இல்லத்தில் நடந்த தீபாவளி
மதுரை : மதுரை உத்தங்குடி ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் ஐகோர்ட் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடப்பட்டது.சங்கத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், அவரது மனைவி உஷா, மதுரை உயர்நீதி மன்ற நிர்வாக நீதிபதி சுப்ரமணியன் முதியோருக்கு இனிப்பு, புத்தாடை வழங்கினர். நண்பர்கள் அமைப்பு சார்பில் முதியோருக்கு முடிதிருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து விருந்து அளித்தனர். தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் செயலாளர் சினிவினோத்தின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சமூகசேவையில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் முத்துக்குமார், நட்சத்திரம் அமைப்பு நிறுவனர் ஸ்டார்குரு, தமிழ் சினிமா நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் சினிவினோத், முதியோர் இல்ல மேலாளர் ராமனுக்கு நீதிபதி ஸ்ரீராம் சேவை விருது வழங்கினார்.