தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
திருமங்கலம்: திருமங்கலத்தில் அத்தொகுதி தி.மு.க., வேட்பாளர் மணிமாறன் அறிமுக கூட்டம் நடந்தது. காங்., மாவட்டத் தலைவர் உலகநாதன், தே.மு.தி.க., நிர்வாகி கணபதி, இ.கம்யூ., பொறுப்பாளர் சந்தானம், தொகுதி பொறுப்பாளர் அலாவுதீன், முன்னாள் எம்.எல்.ஏ., லதா, நகர் செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் மதன், சண்முகம், நகராட்சி தலைவர் ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணிமாறன் பேசுகையில், ''திருமங்கலம் தொகுதிக்கு எந்த பதவியிலும் இல்லாமல் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். புதிய மேம்பாலம், வைகை கூட்டு குடிநீர் திட்டம், சாலை வசதிகளை செய்துள்ளோம். பதவியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்வதில் முன்னிலையில் உள்ளோம்'' என்றார்.