உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பரவையில் அத்தியாவசிய பணிகள் முடக்கம்; தி.மு.க., கவுன்சிலர்கள் புகார்

பரவையில் அத்தியாவசிய பணிகள் முடக்கம்; தி.மு.க., கவுன்சிலர்கள் புகார்

வாடிப்பட்டி : 'பரவை பேரூராட்சியில் மூன்ற ஆண்டுகளாக அத்தியாவசிய பணிகள் முடக்கப்படுகிறது' என தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.இப்பேரூராட்சி தலைவர் கலாமீனா. நகரின் 15 வார்டுகளில் குடிநீர், வடிகால், சுகாதார பணிகள் முடங்கியுள்ளது. அரசு நிதியை வீணடிப்பது, திட்டமிட்டு நிதி பெறாதது, தி.மு.க., அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கோடு செயல்படுகிறார். தலைவரும் அவரது கணவரும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.6 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் துரை சரவணன் கூறியதாவது: கட்டடம், காலி மனைகளுக்கு வரையறை வழங்குவதில் முறைகேடுகள் நடக்கிறது. சுகாதாரப் பணியாளர்கள், உபகரணங்கள் வாங்குதல், குடிநீர் குழாய்கள் பராமரிப்புக்கு 3 ஆண்டுகளாக டெண்டர் விடவில்லை. இதிலும் தலைவர், அவரது கணவர் தலையீடும் உள்ளது. இவர்களது ஆதரவு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பணிசெய்ய முடிகிறது, மற்றவர் பணிகளை முடக்கி வைத்துள்ளனர், என்றார்.பேரூராட்சி தலைவர் கலாமீனா கூறியதாவது: அனைத்து வார்டுகளிலும் ஒதுக்கிய பணிகள், எம்.எல்.ஏ.,நிதி ரூ.2 கோடியில் கட்சி பேதமின்றி, மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகிறது. அம்ருத் திட்ட குழாய் பதிப்பு பணியால் வடிகால், சாலைப் பணிகள் தாமதமாகிறது. மதுரையில் 9 பேரூராட்சிகளிலும் டெண்டர் விடவில்லை. 3 செயல் அலுவலர், முன்னாள் உதவி இயக்குனரிடம் டெண்டர் விட வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. பேரூராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு, பணிகள் முடக்கம் என பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை