உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய கல்வி கொள்கையில் தி.மு.க., இரட்டை வேடம்

தேசிய கல்வி கொள்கையில் தி.மு.க., இரட்டை வேடம்

மேலுார் : மேலுாரில் பா.ஜ., சார்பில் பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது. மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மதுரை நகர், மேற்கு மாவட்ட தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ், மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது:டங்ஸ்டனுக்கான அரிட்டாபட்டி மலை, திருப்பரங்குன்றம் மலை மற்றும் அண்ணாமலை என தமிழகத்தில் மூன்று மலைகளை மையப்படுத்திய அரசியல் நடக்கிறது. பல்வேறு பொய்களை பேசியே தி.மு.க., அரசியல் செய்கிறது. தொடர்ந்து 8 வது முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் தான் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இது பெருமைப்பட வேண்டிய விஷயம். தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. செயல்படுத்தாத திட்டத்திற்கு எப்படி நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்றனர். இக்கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், செயலாளர் கண்ணன், மேலூர் நகர் தலைவர் சேவுக மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ