உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

மதுரை : மதுரை நகர் மாவட்ட தி.மு.க.,மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் நடந்தது. மாணவரணி அமைப்பாளர் துரை கோபால்சாமி தலைமை வகித்தார்.கனிமொழி எம்.பி., பேசியதாவது: தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறுகிறது. மத்திய அரசை எதிர்த்த போதிலும் எப்படி சாதிக்க முடிகிறது என வெளிமாநிலத்தவர் பெருமையாக பேசுகின்றனர். பெண்கள் வேலைக்குச் செல்வது, தொழில் முனைவோராவது அதிகரித்துள்ளது. புதுமைப் பெண் திட்டம் மூலம் பெண்கள் கல்லுாரி படிப்பை தடையின்றி தொடர வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளது தி.மு.க., ஆட்சி. அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு முன் பார்லி.,யில் கனிமவள மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. தி.மு.க., எம்.பி.,க்கள் எதிர்த்தனர். ஆதரவளித்து பேசினார் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை. இதை மக்கள் மறக்கவில்லை என்றார். மேயர் இந்திராணி பொன்வசந்த், தளபதி எம்.எல்.ஏ.,பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி