மேலும் செய்திகள்
ஊக்குவிப்பு மையம் துவக்க விழா
11-Sep-2025
மதுரை: மதுரை விளாச்சேரியில் சிப்போ சார்பில் பொம்மை தயாரித்தல் பயிற்சி நிறைவு விழா நடந்தது. கலைஞர் கைவினை திட்டம் மூலம் 7 நாட்கள் நடந்த இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு திறன்மேம்பாட்டு நிறுவனம் நிதி உதவியுடன், சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) செய்திருந்தது. நிறைவு விழாவில் கலெக்டர் பிரவீன்குமார் சான்றிதழ் வழங்கினார். பயனாளிகள் உற்பத்தி செய்த பொருட்களை பார்வையிட்டார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், நபார்டு வங்கியின் துணை பொதுமேலாளர் சக்திபாலன், யூனியன் வங்கி மேலாளர் தனுாஜ் பங்கேற்றனர். சிப்போ பொதுமேலாளர் பழனிவேல் முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.
11-Sep-2025