மேலும் செய்திகள்
பைக்கில் இருந்து விழுந்த முதியவர் பலி
09-Mar-2026
மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் முன் விரோதத்தில் இரு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மதுரை தேத்தாம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் கடுகுமுனியசாமி 23. ஒத்தக்கடை அருகே பட்டணம் கிராமத்தில் கொடிக்குளம் கால்வாய் ரோட்டில் நேற்று மாலை நண்பர் வண்டியூர் மோகனுடன் 25 வந்துகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சிலர், இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். எஸ்.பி., அரவிந்த் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில், ஒத்தக்கடை ரவுடி 'பொட்டுக்கடலை' பெரியசாமி என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. பட்டணம் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கொலை செய்வதற்காக காரில் வந்தபோது டூவீலர், கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களை ஒத்தக்கடை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
09-Mar-2026