மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி பசு பலி
13-Mar-2025
திருமங்கலம்: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பாறைப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி 60. இவர் அந்தப் பகுதியை சேர்ந்த திருமலை முருகன் என்பவரிடம் பழைய அலைபேசி டவர்களை பிரிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் திருமலை முருகனுக்கு சொந்தமான மினி வேனின் பின்பகுதியில் அமர்ந்து மாடசாமி, கடற்கரை வேலு, வெள்ளைச்சாமி ஆகியோர் திண்டுக்கல்லுக்கு சென்றனர்.வேனை பாறைப்பட்டி கந்தகுமார் ஓட்டிச் சென்றார். கப்பலுார் டோல்கேட் அருகே மேம்பாலத்தை கடக்க முயன்ற போது வேனில் இருந்த மாடசாமி தவறி ரோட்டில் விழுந்தார். அப்போது வேனின் பின்னால் மதுரை நோக்கிச் சென்ற அரசு பஸ் மாடசாமியின் தலைமீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வேனை ஓட்டிச் சென்ற கந்தகுமார், பஸ்சின் டிரைவர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Mar-2025