உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்விளக்கு அவசியம்: மக்கள் எதிர்பார்ப்பு

மின்விளக்கு அவசியம்: மக்கள் எதிர்பார்ப்பு

சோழவந்தான்: செல்லம்பட்டி ஒன்றியம் செக்கான்கோவில்பட்டி - நரியம்பட்டி சந்திப்பில் மின்விளக்கு வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.அப்பகுதி ரத்தீஷ் கூறியதாவது: இரு ஊர்களிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இரண்டு ஊர்களுக்கும் மைய இடமாக இச்சந்திப்பு உள்ளது. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இந்தப் பகுதியில் மின்விளக்குகள் இல்லை.இதனால் இரவில் நடமாட அச்சமாக உள்ளது. வாகனங்களில் வருவோர் தடுமாறி விழுகின்றனர். பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் திருடர் பயத்தில் தவிக்கும் நிலை உள்ளது.மின்கம்பத்தில் விளக்குகளை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ