மேலும் செய்திகள்
தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ--ஸ்கூட்டர்
15-Jul-2025
மதுரை: இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர்கள், மின்சார டூவீலர் வாங்க தொழிலாளர் உதவி ஆணையம் சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அமேசான், பிளிப்கார்ட், ஓலா, சோமேட்டோ போன்ற இணையதள நிறுவனங்களில் பணிபுரிவோர்'கிக்' தொழிலாளர்கள். தமிழ்நாடு இணையம் சார்ந்த் கிக் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெறும் அத்தகைய தொழிலாளர்களுக்கு மின்சார டூவீலர் வாங்குவதற்கு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், நலவாரிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் www.tnuwwb.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 90031 14821ல் தொடர்பு கொள்ளலாம்.
15-Jul-2025