உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்

பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அயன்மேட்டுப்பட்டியில் உயர்அழுத்த மின்கோபுரம் சரிந்தது. உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. புத்துார் மலையடிவாரத்தில் உள்ள போத்தம்பட்டி கிராமப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் கிண்ணிமங்கலம் மின்வாரிய சப் ஸ்டேஷனில் இருந்து தேனி செல்லும் 230 கி.வாட்., உயர் மின் கோபுர வழித்தடத்தில் அயன்மேட்டுப்பட்டி நல்லதங்காள் கோயில் அருகே உயர் மின் கோபுரத்தின் மேல்பகுதி சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இல்லாத நிலையில் மின்வாரிய பணியாளர்கள் அதனை உடனே சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போத்தம்பட்டி அருகே ரோட்டோரம் இருந்த சீமைக் கருவேல மரம் சாய்ந்து சற்றுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருமாதங்களுக்குப் பின் பரவலாக மழை பெய்ததால் உசிலம்பட்டி, எழுமலை வட்டார விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை