உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழில் முனைவோர் விழிப்புணர்வு கூட்டம்

தொழில் முனைவோர் விழிப்புணர்வு கூட்டம்

மதுரை: மதுரையில் தாட்கோ சார்பில் சென்னையில் நடக்கவுள்ள தொழில் முனைவோருக்கான கண்காட்சி, சிறப்பு கருத்தரங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது.இதில் மேலாண்மை இயக்குனர் கந்தசாமி பேசியதாவது:சென்னையில் நடக்க உள்ள கண்காட்சி, கருத்தரங்கில் அதிகளவில் தொழில் முனைவோர் பங்கேற்க வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் கல்வி, சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் ஏதாவது ஒரு வேலை என்பதைவிட, தொழில் முனைவோராக மாறவேண்டும்.இத்தகைய தொழில் முனைவோர் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டு செய்தல், சந்தைப் படுத்துதல், சந்தை நிலவரங்களை கவனித்தல் போன்ற நுணுக்கமான விஷயங்களை கற்றறிதல் வேண்டும், என்றார்.கலெக்டர் சங்கீதா விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தாட்கோ மேலாளர் திருநாவுக்கரசு, தொழில் மைய பொது மேலாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்