சுற்றுச்சூழல் தினம்
மதுரை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை யங் இந்தியன்ஸ் அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் பிரிவு சார்பில் திருமங்கலத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைவர் பொன் குமார், நிர்வாகி யோகராஜன் ராஜவேல் ஏற்பாடுகளை செய்தனர். திருமங்கலம் வடகரை பகுதிகளில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.