உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைதிகளுக்கு கண் பரிசோதனை

கைதிகளுக்கு கண் பரிசோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் ரோட்டரி மேற்கு சங்கம், கிருபா தொண்டு நிறுவனம், ஏ.வி.எஸ்.எஸ்., மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை, கிருஷ்ணா கண் பாதுகாப்பகம் சார்பில் பொது, எலும்பு முறிவு, தோல் மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது. டி.ஐ.ஜி., முருகேசன் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி துவக்கி வைத்தார். 261 கைதிகள், 10 சிறை பணியாளர்கள் பயன் பெற்றனர். ரோட்டரி சங்கத் தலைவர் தனராஜன் கைதிகளுக்கு புத்தகங்களும், கண் கண்ணாடிகளும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை