உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சியுடன் கண் மருத்துவமனை ஒப்பந்தம்

மாநகராட்சியுடன் கண் மருத்துவமனை ஒப்பந்தம்

மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவர் களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை, கண் கண்ணாடி வழங்கு வது தொடர்பாக கமிஷனர் சித்ரா முன்னிலையில், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இம்மருத்துவமனை சார்பில் பள்ளிகளில் கண் மருத்துவ பரிசோதனை செய்ததில் 226 மாணவர் களுக்கு பார்வை குறை பாடு இருப்பது தெரிந்தது. அவர்ளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கண் குறைபாடுள்ள மாணவர்களுக்கு 5 ஆண்டு களுக்கு பரிசோதனை, இலவச கண் கண்ணாடிகள் வழங்க மாநகராட்சியுடனான ஒப்பந்தத்தில், மருத்துவமனை டாக்டர் விஜயலட்சுமி கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியில் துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், முதன்மை மருத்துவ அலுவலர் ஸ்ரீகோதை, மருத்துவமனை திட்ட மேலாளர் ஜெயச்சந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ