விவசாயிகளுக்கு பண்ணை பயிற்சி
வாடிப்பட்டி: செம்மினிபட்டியில் நல்ல வேளாண் நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி நடந்தது. வாடிப்பட்டி வட்டார வேளாண் தொழில்நுட்ப முகமை திட்டத்தில் நடந்த இப்பயிற்சியில் இணை இயக்குனர் முருகேசன் பண்ணைப் பள்ளி, உளுந்து சாகுபடி தொழில்நுட்பம் பற்றியும், துணை இயக்குனர் ராணி நெல் அறுவடைக்குப் பின் பயறு சாகுபடி குறித்தும், உதவி இயக்குனர் பாண்டி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம், வேளாண் அலுவலர் ஞானசுந்தரி உயிர் உரங்கள் பயன்பாடு, மத்திய, மாநில திட்டங்கள் குறித்தும், ஓய்வு வேளாண் அலுவலர் குணசேகரன் பயறு வகை சாகுபடி பருவம் மற்றும் விதை நேர்த்தி பயன்கள், உதவி வேளாண் அலுவலர் பாண்டியராஜன் மானிய திட்டங்கள் குறித்தும், தொழில்நுட்ப மேலாளர் பிரியா தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் குறித்தும் பேசினர். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பூமிநாதன், அருணா தேவி ஏற்பாடு செய்திருந்தனர்.