உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பண்ணை பயிற்சி பள்ளி முகாம்

பண்ணை பயிற்சி பள்ளி முகாம்

கொட்டாம்பட்டி: மேலவளவில் கொட்டாம்பட்டி வட்டார வேளாண்மை முகமை திட்டத்தின் கீழ் நெற்பயிரில் இயற்கை வேளாண்மை குறித்து பண்ணை பயிற்சி பள்ளி முகாம் நடந்தது. துணை இயக்குநர் அமுதன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் சுபாசாந்தி முன்னிலை வகித்தார். விதை சான்று அலுவலர் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் இயற்கை வேளாண்மை செய்வதன் நோக்கம், பயன்பாடு, பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை, விவசாயி கடன் அட்டை போன்ற திட்டங்கள், முதல்வரின் மண்ணுயிர் காப்போம், அங்கக வேளாண்மை மற்றும் விதை சான்று குறித்து பேசினர். வேளாண் அலுவலர் ரகுராமன், உதவி அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, மேலாளர்கள் கண்ணன், சத்திய கீர்த்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி