விவசாயிகள் கள ஆய்வு
மேலுார்: கேசம்பட்டி ஊராட்சி கடுமிட்டான்பட்டியில் பெரிய அருவி நீர்த்தேக்கம் உள்ளது. அருவியை புனரமைக்க அரசு ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியது. இப்பகுதி விவசாயிகள், தமிழர் மக்கள் இயக்கம், சமூக செயற்பாட்டாளர்கள் அருவியை கள ஆய்வு செய்தனர். அங்கு என்ன வேலை செய்யப்படவுள்ளது, எவ்வளவு நிதி என்ற எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. அதனால் விவசாயிகள் மேலுார் நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்தனர். அவர்களிடம் தகவல் பலகை வைக்கவும், அருவியின் உள்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரிக்கவும், நீர் தேக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.