விவசாயிகள் அடையாள எண் பதிவுக்கு ஏப்.30 வரை நீட்டிப்பு
பேரையூர்: விவசாயிகள் தேசிய அடையாள எண் பதிவு ஏப்.30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.சேடப்பட்டி வட்டார உதவி உதவி இயக்குனர் ராமசாமி கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பலன்களை விவசாயிகள் பெற தங்கள் நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் உரிய நேரத்தில் பெறும் வகையிலும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்கக திட்டம் செயல்படுகிறது.தற்போது விவசாயிகள் பதிவு எண் பெற ஆதார் எண், அலைபேசி எண், நில விவரங்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடமை விவரங்களை பதிவு செய்து தனி அடையாள எண்ணை பெற வேண்டும். இதற்கான காலஅவகாசம் ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அடையாள எண்ணுக்கு வட்டார வேளாண் அலுவலகம், பொதுச் சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என்றார்.