உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது

ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ரயில் மறியல் போராட்டத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.விவசாய சங்க தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து போலீஸ், மத்திய துணை ராணுவம் கைது செய்ததைக் கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்நிகழ்வை கண்டித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று காலை 9:00 மணிக்கு மதுரையில் இருந்து போடிநாயக்கனுார் செல்லும் ரயிலை உசிலம்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் மறித்து போராட வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய ரயில்வே மற்றும் உசிலம்பட்டி போலீசார் மாவட்ட அவை தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில துணை செயலாளர் நேதாஜி உள்பட 22 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., காமாட்சி தலைமையில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை