உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் காய்ச்சல் வார்டு

மதுரை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் காய்ச்சல் வார்டு

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டு அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை. வைரஸ் காய்ச்சலுக்கு நேற்று 11 பேர் பாதிக்கப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 46 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு, கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்கிறார் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் குமரகுருபரன்.அவர் கூறியதாவது: டெங்கு வைரஸ் சீசன் குறையவில்லை. சுத்தமான தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு பரவும் என்பதால் வீட்டில் தண்ணீர் நிரப்பப்பட்ட அனைத்து பாத்திரங்களையும் கொசுக்கள் முட்டையிடாதவாறு மூடி வைக்க வேண்டும். மழை பெய்யும் போது வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கினால் வடிகால் வசதி செய்து நீரை வெளியேற்ற வேண்டும். தேங்காய் சிரட்டை, மட்டை, பிளாஸ்டிக் கப்களில் சில துளிகள் மழைநீர் சேர்ந்தால் கூட கொசுக்கள் உற்பத்தி ஆரம்பித்து விடும் என்பதால் அவற்றை முறையாக அகற்ற வேண்டும்.சுகாதாரத்துறை சார்பில் உள்ளாட்சி முதல் மாநகராட்சி வரை 900 கொசுப்புழு ஒழிப்பாளர்கள் வீடுதோறும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிறதா என தினமும் ஆய்வு செய்கின்றனர். காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் கிராமப்புறங்களில் 13, மாநகராட்சியில் ஒன்று வீதம் 14 நடமாடும் மருத்துவ குழுக்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர் என்றார்.மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக 20 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு ஏற்கனவே உள்ளது. கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டாலும் வார்டு தயார் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ