மேலும் செய்திகள்
குன்றத்தில் உயிர் உரங்கள் தயாரிப்பு
18-Dec-2024
கொட்டாம்பட்டி : கைலம்பட்டியில் நெல் வயல் சூழல் ஆய்வு பற்றி விவசாயிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் அலுவலர் ஜெயந்தி விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிடுவது, தரமான அரசு சான்று விதைகள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனஸ் ப்ளோரோசன்ஸ், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ், பயன்படுத்தும் முறைகள் மற்றும் பயன்கள் குறித்து பேசினார்.மேலும் பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கண்டறிவது, நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாப்பது, உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள், வயல் பகுதியில் விளக்கு பொறி வைத்தல், வரப்புகளில் பயறு வகைகளை சாகுபடி செய்வது குறித்து பயிற்சி அளித்தார்.
18-Dec-2024